இந்நிலையில் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் விஜயதாரணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை வெளியான பட்டியலில் விஜய் தாரணி பெயர் இல்லை என்பது அவரது தரப்பினருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
ஏற்கனவே அவர் எம்எல்ஏவாக இருந்த நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் எம்எல்ஏ பதவி இருந்த நிலையில் அந்த பதவியை யார் ராஜினாமா செய்து விட்டு பாராளுமன்றத்தில் எம்பி ஆகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது பெயர் மக்களவைத் தேர்தல் பட்டியலிலும் இல்லை என்பதால், உள்ளதும் போச்சு என்ற பழமொழியை ஞாபகப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.