ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழர்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (10:29 IST)
அருணாச்சல பிரதேசத்தில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்ட்டர் விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானங்களில் ஒருவர் தமிழர் என்று தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று காலை அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரை தேடும் பணிகள் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் பகல் 12 30 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து புகை வந்து கொண்டிருந்த நிலையில் அதில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் கருகி உயிரிழந்தனர்  என்பதும் கண்டறியப்பட்டது.
 
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் வுவிவி பிரட்டி மற்றும் ஜெயந்த் என்றும் தெரியவந்தது. இதில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்