ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுனர் அலுவலகத்திற்குள் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆளுனர் உட்பட 3 பேர் பலியாகினர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற நிலையில், அங்கு, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதையடுத்து, பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுப்பு, பொதுஇடங்களில் ஹிஜாப் அணிந்து செல்லல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் மாகாணத்தின் தலைநகர் மஸார் –இ ஷெரீப்பில் உள்ள ஆளுனர் அலுவலகத்திற்குள் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், தாலிபான் களால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுனர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.