மீண்டும் கேரளாவிற்கு பேராபத்து - 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (10:11 IST)
கேரளாவில் ஏற்பட்ட மிகப்பெரிய சீற்றத்திலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மீண்டும் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் 483 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது.
பேரழிவில் இருந்து கேரள மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்பொழுது  மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நாளை மற்றும் நாளை மறுநாள் பத்தினம் திட்டா, இடுக்கி, வயநாடு, திரிச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கேரள மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்