காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, சீரியல் நடிகை நிலானியின் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளது. லலித்குமார் ஒரு பொம்பள பொறுக்கி. அவன் பல பெண்களை ஏமாற்றியுள்ளான். என்னையும் ஏமாற்றினான். திருமணம் செய்து கொள் என எனை மிரட்டி எனக்கு தொல்லை கொடுத்து வந்தான் என நிலானி கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்.
அந்நிலையில், மரணமடைந்த லலித்குமாரின் சகோதரர் ரகு நேற்று நிலானிக்கு எதிராக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், என் சகோதரரின் இறப்புக்கு நிலானியே காரணம். லலித்குமார் மீது நிலானி தவறான புகாரை அளித்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். என் சகோதரரை அவர் ஏமாற்றிவிட்டு நாடகம் ஆடுகிறார். அவருக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு உள்ளது. மேலும், அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், சென்னை ஆலப்பாக்கத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக தங்கியிருந்த நிலானி கொசு மருந்தை குடித்துவிட்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ரகு “எனது அண்ணனின் வாழ்க்கையை நிலானி கெடுத்து, அவரை தற்கொலை செய்ய வைத்துவிட்டார். லலித் என் குடும்ப உறுப்பினர் உட்பட பலரிடம் கடன் வாங்கி அவருக்கு செலவு செய்துள்ளான். ஆனால், நிலானி நாடகமாடி வருகிறர். அவரின் குழந்தைகளின் எதிர்காலம் கருதியே நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறோம். லலித்குமார் குறித்து அவதூறாக தொடர்ந்து பேசி வந்தால் எங்களிடமிருக்கும் ஆதாரங்களை வெளியிடுவோம்” என அவர் எச்சரித்துள்ளார்.