இந்தியா மற்றும் சீனா நாடுகளிடையே கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், சீன தரப்பில் எத்தனை வீரர்கள் மரணம் அடைந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த மோதலுக்கு பின் இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து எந்த பொருளும் இறக்குமதி செய்வதில்லை என்றும் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டது
இந்தியாவின் இந்த அதிரடி முடிவால் சீனா அதிர்ச்சி அடைந்தாலும் சீனா தனது படைகளை கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலையில் திடீரென கல்வான் நதியில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு பெய்த கனமழை காரணமாக அதிக அளவில் அங்கே தண்ணீர் வர தொடங்கியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நதி செல்லும் பாதையில்தான் சீனா தற்போது அதிக படைகளை குவித்து இருந்ததாகவும் இதனால் ஒரு சில இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவுக்கு எதிராக சீனா சதி செய்வதால் இயற்கையே மழையை பொழிந்து சீனாவின் படைகளை பின்வாங்க செய்துவிட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் முன்வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த சீனா, இந்த விவகாரத்தில் பின்வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது