பெங்களூருவில் பலத்த கனமழை.. சென்னைக்கு திருப்பிவிடப்பட்டதால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 10 மே 2024 (07:52 IST)
பெங்களூருவில் பலத்த கனமழை காரணமாக தரையிறங்க முடியாத 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பெங்களூருவில் நேற்று இரவு சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 10 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இன்று அதிகாலை பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும், 10 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன.
 
முன்னதாக பெங்களூரு நகரம் உள்பட கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது என்பதும் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடிய நிலையில் அதிக பணம் கொடுத்து தண்ணீர் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில் தற்போது கன மழை பெய்து உள்ள நிலையில் பெங்களூரில் தண்ணீர் கஷ்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காவிரியில் இருந்து திறக்கக்கூடிய தண்ணீரையும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விடும் வாய்ப்பு இருப்பதாகவும் புறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்