கர்நாடகாவில் பஜ்ரங் தளத் தொண்டர் கொலை: மூவரை கைது செய்த காவல்துறை

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:05 IST)
கர்நாடக மாநிலத்தில் பஜ்ரங் தள தொண்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. 
 
நேற்று  கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா என்ற பகுதியில் மர்ம நபர்கள் பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஹர்ஷா என்ற இளைஞரை கொலை செய்தனர். இந்த கொலை காரணமாக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பதட்டம் நிலவியது 
மேலும் இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த கொலை சம்பந்தமாக மூன்று பேர்களை கைது செய்துள்ளதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மரணமடைந்த ஹர்ஷாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்