சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (14:28 IST)
திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் பேருந்து டிக்கெட்டின் பின்னால் ஜெருசலேம் பற்றிய விளம்பரம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் பல இயக்கப்படும் சூழ்நிலையில் இந்த பேருந்துகளில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் பின்னால் ஜெருசலேம் மற்றும் ஹஜ் புனித யாத்திரை பற்றிய விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. 
 
குறிப்பாக ஜெகன் மோகன் ரெட்டி ஜெருசலேம் சென்று வந்த பின்னர் திருமலை பேருந்து டிக்கெட்டுகளில் இம்மாதியான விளம்பரங்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. இதற்கு ஏற்றேர் போல் பாஜகவின்னர் மற்றும் இந்து அமைப்பினர் இதை சும்மாவிடுவதாய் இல்லை. 
ஆம், இந்துக்களின் மனம் புண்படும் விதமாக இந்த செயல் இருப்பதாக கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்