பெங்களூரில் உள்ள நகைக்கடையில் துப்பாக்கிச் சூடு

Sinoj
வியாழன், 14 மார்ச் 2024 (14:25 IST)
பெங்களூரில் உள்ள  நகைக்கடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
சமீபத்தில்,ஒரு ஓட்டலில் குண்டிவெடிப்பு நடந்த நிலையில், இதுகுறித்து போலீஸார் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், பெங்களூரில் உள்ள  நகைக்கடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
 
கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் மர்ம  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
பெங்களூரில் உள்ள கொடிகேஹல்லி என்ற பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை  நடத்தி வருகிறார்.
 
ஹந்தாராமின் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை வாங்குவதுபோல் வாக்குவாதம் செய்துள்ளனர்.
 
அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, உரிமையாளர் ஜந்தாராமை நோக்கி சுட்டனர்.
 
இதைத் தடுக்க வந்த  நகைக் கடை ஊழியர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
 
இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்