இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்தார். அடுத்தடுத்த ராஜினாமாக்கள் தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாகவுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு கூட்டத்தில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து, கேரளாவைச் சேர்ந்த ஞானேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.