கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Sinoj

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:57 IST)
கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
 
அந்த வகையில், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஏஜிஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு,  இரவு உணவு உண்ணும்போது திடீரென மயங்கி விழுந்தார் ஹொய்சலா.
 
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை தெரிகிறது. 
 
கிரிக்கெட் வீரர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், கர்நாடக பீரிமியர் லீக்கிலும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்