வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற சரக்கு ரயில் எஞ்சின்! என்ன காரணம்?

Siva
திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:03 IST)
வந்தே பாரத் ரயில் ரயிலை சரக்கு ரயில் இன்ஜின் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் தமிழகத்தில் கூட சில ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

வந்தே பாரத் ரயில்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது என்பதும் வசதியான பயணம் குறுகிய நேரத்தில் இலக்கை அடைவது போன்ற காரணமாக பயணிகள் மத்தியில் இந்த ரயில் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுடெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனை அடுத்து ரயில்வே அதிகாரிகள் 3 மணி நேரம் போராடியும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை.

இதனை அடுத்து பயணிகள் அதிக நேரம் காத்திருக்கிறார்கள் என்பதால் உடனடியாக சரக்கு ரயில் எஞ்சின் வரவழைக்கப்பட்டு வந்தே பாரத் ரயிலை இழுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்