Gate தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (10:09 IST)
நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர Gate தேர்வு எழுத வேண்டும் என்பதும் இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை Gate தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
https://gate.iitk.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப தாரர்கள் Gate தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்