திடீர் திடீரென மயக்கம் போட்டு விழுந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

Webdunia
வியாழன், 7 மே 2020 (07:54 IST)
திடீர் திடீரென மயக்கம் போட்டு விழுந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கெமிக்கல் ஆலை ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வாயு கசிவால் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை திடீரென கெமிக்கல் ஆலை ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஆயிரக்கணக்கானோர் திடீர் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் மயங்கி விழுந்தவர்களை உடனடியாக ஆம்புலன்சில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 
 
மேலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கண் எரிச்சல் இருப்பதாகவும் இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த ஆலயம் பூட்டப் வெளியேற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவு தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. அது மட்டுமன்றி கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்து இருந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் மூச்சுத்திணறல் வாந்தி மற்றும் தலைவலியுடன் அவதிப்படுவதை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் கெமிக்கல் ஆலையில் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்