ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. வடக்கு கடலோர ஆந்திரா, மத்திய ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளின் 3 நகரங்கள் தலைநகரங்களாக இருக்கும்.
விசாகப்பட்டினம் உள்கட்டுமான வசதிகளுடன் இருப்பதால் அதனை முதன்மை தலைநகராகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகராகவும் , கர்நூலை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது ஆந்திராவின் தலைநகர் குறித்து அமெரிக்க ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சியுடன் ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய ஆலோசனையில், விசாகப்பட்டினத்தை தேர்தெடுப்பது வளர்ச்சிக்கு உஅதவும் என கூறப்பட்டுள்ளதால், ஆந்திராவின் தலைநகர் எதுவென தேர்ந்தெடுக்கும் குழப்பத்தில் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.