Four-ம், Six-ம் எப்படி அடிப்பீங்க? பெட்ரோல் பங் கிரிக்கெட்: வைரல் வீடியோ!!

வியாழன், 26 மார்ச் 2020 (14:02 IST)
ஆந்திரவில் ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். 
 
உலகெங்கும் 4,00,000 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 20000 பேர் வரை இறக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு 609 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது.  
 
உயிரிழப்பை பொருத்தவரை 13 ஆகவும் உள்ளது. இந்நிலையில் மேலும் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு தொற்று பரவமால் இருக்க கைக்கொடுப்பதாய் தெரியவில்லை. 
 
ஊரடங்கை மக்கள் அவசியமான ஒன்றாக கருதவதாகவும் தெரியவில்லை. பலர் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி திரிந்து போலீசாரிடம் அடி வாங்கி கட்டிக்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் கிரிக்கெட் ஆடும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஆம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் யாரும் வராத காரணத்தால் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து உள்ளனர். இதோ இந்த வீடியோ... 

#WATCH Andhra Pradesh: Employees of a petrol bunk in Visakhapatnam play cricket amid #CoronavirusLockdown. (25.03.2020) pic.twitter.com/pYz1kljMR8

— ANI (@ANI) March 26, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்