ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:23 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவித்து வரும் நிலையில் ஒரு மாநிலம் மட்டும் ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு என அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு என அறிவித்துள்ள மாநிலம் மணிப்பூர். மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் அம்மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மணிப்பூரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4390 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய தேவை மட்டும் இயங்கும் என்றும் மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வரும் இந்த ஊரடங்கை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் மாநிலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்