அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடையாது: அரசு அதிரடி

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (17:57 IST)
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் தெரிவித்துள்ளது.


 

 
ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று கொண்டிருகின்றன. அதனால் போராட்டங்களை கட்டுப்படுத்த காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் முதலமைச்சர் மெகபூபா முப்தி என்ன செய்வது என்று தெரியாமல், பிரதமர் மோடியிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். இந்நிலையில் சில பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. 
 
அதனால் இன்று முதல் பணிக்கு திரும்பாத ஊழியர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்