கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் பலி:60 ஆக அதிகரித்ததால் அதிர்ச்சி..!

Mahendran

செவ்வாய், 25 ஜூன் 2024 (10:40 IST)
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் இன்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக அவருடைய உடல் நலம் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவர் சிகிச்சையின் பலனின்றி  உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளதை அடுத்து சிபிஐ விசாரணை தேவை என எதிர் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை சிறப்பாக விசாரணை செய்து வருகின்றனர் என்றும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்