எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பேரம் : தெலுங்கானாவில் 3 பேர் கைது!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (11:19 IST)
எம்.எல்.ஏக்களை  விலைக்கு வாங்க பேரம் பேசியதாக ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அந்த கட்சியை சேர்ந்த 4 பேர்களுக்கு தலா ரூ.50 கோடி என மொத்தம் 200 கோடிக்கு விலை பேசி வாங்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இது குறித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
கைதான மூன்று பேர்களில் ஒருவர் மத்திய அமைச்சருக்கு மிக நெருக்கமானவர் என்று தகவல் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியை கவிழ்ப்பது போல் தெலுங்கானா மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்க்க 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசிய தகவல் வெளியாகி உள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்