இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வீரர்களில் பெரும்பாலோர் யூத மதத்தினர், ஒரு சிலர் இஸ்லாமியர்கள். இரண்டு மதங்களுக்கும் பொதுவான உணவு விதிமுறைகள் உள்ளன. எனவே, வீரர்களுக்கான உணவு கண்டிப்பாக கோஷர் அல்லது ஹலால் ஆக இருக்கும். பன்றி இறைச்சி, மட்டி மீன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற பிற இறைச்சிகள் அனுமதிக்கப்பட்டாலும், கோழி இறைச்சியே அவர்களுக்கு விருப்பமானது. காரணம்? சமைக்க குறைந்த நேரம், நல்ல சுவை, எளிதில் கிடைப்பது.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைவ உணவுப் பிரியர்களுக்கு ஃபாலாஃபெல், சபிச் போன்ற சிறப்புஉணவுகள் கிடைக்கின்றன. காலை உணவாக டுனிசியன் சாண்ட்விச்கள், ஹம்மஸ், மியூஸ்லி போன்றவை வழங்கப்படுகின்றன. மதிய உணவில் கிரில்ட் சிக்கன், ஷவர்மா, ஹாம்பர்கர் போன்ற அசைவ உணவுகளும், டோஃபு ஷினிட்செல், சைவ ஹாம்பர்கர் போன்ற சைவ உணவுகளும் உண்டு. இரவு உணவும் மதிய உணவு போல இருந்தாலும், அளவு குறைவாக இருக்கும்.