முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:19 IST)
ஆந்திர மாநில முன்னாள்  முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அம்மா நிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் என்.டி.ராமாவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே.உமா மகேஷ்வரி   இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்..

உடல் நலக்குறைவு காரணமாக  பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உமா மகேஸ்வரி இன்று, ஐதராபாத்- ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது வீட்டிலி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இத்குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்