தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் பள்ளி மாணவிகளின் மரணம் பரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரு பிளஸ் 2 மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று காலையில் பள்ளி சென்ற மாணவி சிவகாமி, மாதம் தோறும் நடத்தப்படும் தேர்வை எழுதியுள்ளார். அதன்பின், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி, நேற்றிரவு 9 மணியளவில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து,தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின், பெற்றோர் மாணவிக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.