திடீரென தீப்பிடித்த எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:18 IST)
திடீரென தீப்பிடித்த எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்!
ஆடம்பர கார் ஒன்று கள்ளக்குறிச்சி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அந்த காரில் சென்று கொண்டிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
 
கள்ளகுறிச்சி மாவட்டம் எடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரும் அதே ஊரை சேர்ந்த சிவராஜ் என்பவரும் காரில் சென்று கொண்டிருந்தனர் 
 
இந்த நிலையில் அந்த கார் சங்கராபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கத்தில் புகை வந்தது. இதனையடுத்து காரை ப்ரேக் போட்டு நிறுத்தி சிவராஜ் இறங்கி பார்த்த போது திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது
 
இதனையடுத்து இருவரும் காரில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இருப்பினும் கார் தீயில் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்