அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது, அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் புகவாய்ப்புள்ளது என தகவல் வந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம். ஆனால், எங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிகவில்லை. அதிமுக அலுவலகத்திற்குள் ர்வுடிகளை அழைத்து வந்து நிர்வாகிகளைத் தாக்கிய பன்னீர் செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது. அதிமுகவில் உயர்ந்த பதவி வகித்த வர் செய்த செயல் வேதனைக்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் துரோகிகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளது நீரூபனமாகியுளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வேண்டுமென்றே சீல் வைத்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலம் தலைமை அலுவலகம் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.