பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி..!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (12:47 IST)
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி நேற்று பாஜகவில் இணைந்ததை அடுத்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திரா தெலுங்கானா என பிரிப்பதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவர் பாஜகவில் இணைந்துள்ளார். 
 
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள் ஒவ்வொருவராக பாஜகவில் இணைந்து வருவது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்