அண்ணாமலை மீது அவதூறு: காயத்ரி ரகுராம் மீது பாஜக புகார்..!
வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:24 IST)
அண்ணாமலை மீது தான் நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதை அடுத்து அவர் மீது தமிழக பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர்
பாஜகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் அண்ணாமலை குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகிறார்
இந்த நிலையில் அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் காயத்ரி ரகுராம் அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை சைபர் க்ரைம் போலீசில் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது
ஹாஹா நான் என்ன அவதூறு சொன்னேன்? அண்ணாமலைப் அவதூறுயும் வார்ரூம் அவதூறுயும் ஒப்பிடவா? பாஜக புகார் கொடுத்ததா, அண்ணாமலை புகார் கொடுத்தாரா? என் மீது நேரடியாக புகார் கொடுக்க அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறதா?