உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சோபன் பிளாக் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 176 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பகுதி அம்மாநிலத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டு வரும் மதிய உணவு மற்றும் பால் ஆகியவற்றையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில் இப்பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் 85 மாணவர்களுக்கு வெறும் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து காய்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.