தாஜ் மஹால் அமைந்திருக்கு ”ஆக்ரா” நகரின் பெயரை மாற்ற உத்திர பிரதேச அரசு ஆலோசனை செய்து வருகிறது.
சமீபத்தில் உத்தர பிரதேச அரசு, ”அலஹாபாத்” நகரின் பெயரை ”பிரயக்ராஜ்” என்று மாற்றியது. மேலும் வரலாற்று பழமைமிக்க முகல் சாராய் ரயில் நிலையத்தை தீன தயால் உபத்யாய ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது உத்தர பிரதேச அரசின் கவனம் ஆக்ராவின் பக்கம் திரும்பியுள்ளது. அதாவது அகரவன் என்ற பழமையான பெயர் தான் ஆக்ரா என மாற்றப்பட்டது என உத்தர பிரதேச அரசு நம்புகிறது.
இதை தொடர்ந்து ஆக்ராவின் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைகழகத்தின் வரலாற்று ஆய்வாளர்களிடம் இது குறித்தான வரலாற்று ரீதியான ஆதாரம் இருக்கிறதா என ஆராயுமாறு உத்தர பிரதேச அரசு கடிதம் எழுதியுள்ளது.