ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் - திரையுலகினர் அஞ்சலி

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (11:02 IST)
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் செய்யப்பட இருக்கிறது. 

 
திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அதன்பின், அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு  ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான அனுமதி கடிதத்தை நேற்று துபாய் போலீசார் தற்போது வழங்கியுள்ளனர். 
 
அதற்குபின் அவரது உடல் என்பார்மிங் செய்யப்பட்டு அவரது உடல் நேற்று இரவு 10 மணி அளவில் அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  
 
இந்நிலையில், அவரின் இறுதி ஊர்வலம் இன்று காலை 11 மணியளவில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது அவரின் உடலுக்கு தமிழ், பாலிவுட் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அது முடிந்தவுடன் அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்