ஸ்ரீதேவியின் மரணத்தில் எழும் சந்தேகங்கள் - விடை கிடைக்குமா?

செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (12:13 IST)
நடிகை ஸ்ரீதேவி, உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்ற போது கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். 

 
மாரடைப்பின் காரணமாக அவர் மரணமடைந்ததாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மது போதையில் இருந்த அவர் குளியலறையில் இருந்த தொட்டியில் மயங்கி விழுந்து, நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
 
ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி அவரின் கணவர் போனி கபூரிடம் அவர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர். அனைத்து விசாரணையும் முடிந்த பின்பே, அவரை உடலை பதப்படுத்தி இந்தியா எடுத்து செல்ல அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அனுமதி வழங்குவார். அந்த அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. 
 
எனவே, அவர் அனுமதி அளித்து பின்பே ஸ்ரீதேவியின் உடல் என்பாஃர்மிங் (பதப்படுத்துதல்) செய்யப்படும். அதன்பின், அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு, அவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 
 
அனைத்து நடைமுறைகளும் முடிந்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டுவர இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ஸ்ரீதேவியின் மரணத்தில் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளது.
 
1. ஸ்ரீதேவி போன்ற தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர் தன்னிலை மறக்கும் அளவுக்கு குடித்திருப்பாரா? 
 
2. பாத் டப்பில் மயங்கி விழுந்து இறக்கும் அளவுக்கு மூழ்க முடியுமா? 
 
3. மயங்கி விழுகும் போது எந்த அடியும் படாமல் இருப்பது சாத்தியமா? 
 
4. ஸ்ரீதேவியின் அறைக்கு அவரின் கணவர் போனி கபூர் மாலை 5.30 மணிக்கு சென்றுள்ளார்.
6.25 மணிக்கு குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். ஆனால், இரவு 9 மணிக்குதான் அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஏன் இந்த தாமதம்? அதேபோல், இரவு 11 மணிக்குத்தான் இறந்தார் என்று சொல்லப்படுவது எப்படி?

 
5. மயங்கிய நிலையில் ஸ்ரீதேவியை கண்ட கணவர் போனி கபூர் மருத்துவ உதவியை அழைக்காமல் நண்பரையும் பின்னர் போலீசையும் அழைத்தது ஏன்? 
 
6. ஸ்ரீதேவி  கார்டியாக் அரஸ்ட் அதாவது மாரடைப்பின் காரணமாகவே இறந்தார் என்று செய்தி வெளியிட்டது ஏன்?
 
7. அதை விட முக்கிய கேள்வி துபாய் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பிய ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், மீண்டும் துபாய் சென்றது ஏன்?
 
8. மனைவியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்த என பதில் கூறப்பட்டிருந்தாலும், அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
 
இப்படி பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்