ஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி...

செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:50 IST)
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்க துபாய் போலீசார் அனுமதி வழங்கி விட்டனர்.

 
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி அவரின் கணவர் போனி கபூரிடம் அவர்கள் விசாரனை நடத்தி வந்தனர். அனைத்து நடைமுறைகளும் முடிந்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டுவர இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு  ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான அனுமதி கடிதத்தை துபாய் போலீசார் தற்போது வழங்கியுள்ளனர். இதற்கு பின் அவரது உடல் என்பார்மிங் அதாவது பதப்படுத்துதல் செய்யப்படும். அதற்கு எப்படியும் 2 மணி நேரங்கள் ஆகும். அதற்கு பின் அவரது உடல் இன்று இரவு மும்பைக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது.

 
இந்த தகவல் துபாய் இந்திய தூதகரத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அவரது பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா விசா ஆகியவற்றை ரத்து செய்யும் பணியிலும் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்