ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை உணவுஅமைச்சகங்களில் பயன்படுத்த வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிமுதல் தடைவிதிப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மஃகுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் பூமியில் பல பாதிப்புகள் ஏற்படும். எனவே இதனை உணர்ந்து நம் தமிழக அரசு கடந்த ஜனவரி முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது. இதையெடுத்து வேறு சில மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்று, மத்திய உணவு மற்றும் நுகர்வுத்துறை அமைச்சகத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்.
மேலும், இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து இந்த அமைச்சகத்தின் கீழுள்ள அத்துணை பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.