இதன் அடிப்படையில் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டுவது, சுகாதாரம் பேணுவது , கிராமத்திற்காம பொதுக்கழிவறை,நகர்ப்புறங்களில் கழிவறை, பள்ளி கல்லூரிகளில் கழிவறை, பெண்களுக்கான் தூய்மை பிரச்சாரம் போன்ற திட்டங்கள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் விளம்பரதூதர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் மோடிக்கு, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதற்காக உலகமகா கோடீஸ்வரரான பில் கேட்ஸின் அறக்கட்டளை சார்பில் அவருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சார் ஜிதேந்திர சிங் தகல் தெரிவித்துள்ளார்.