விவசாயிகள் இணைந்து தொடங்கும் புதிய கட்சி! – பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (15:55 IST)
மத்திய அரசின் விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாய அமைப்புகள் இணைந்து கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தினர் பலர் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது விவசாயம் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 22 விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியை தொடங்கி பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. ஆரம்பத்தில் ஆம் ஆத்மியுடன் இணைந்து இவர்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஆரம்பத்தில் பேசிக் கொள்ளப்பட்டாலும் தற்போது 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்