சாகர் மாவட்டத்தில் வசித்து வந்த மனோகர் மற்றும் திரௌபதி தம்பதியரின் மகள் ஷிவானி, தனது தாய் திரௌபதிக்கும், தந்தை மனோகரின் நண்பரான சுரேந்திராவிற்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதை நேரில் பார்த்துவிட்டார். இதை அவர் தனது தந்தையிடம் தெரிவித்ததும், மனோகர் அதிர்ச்சி அடைந்து திரௌபதியிடம் கள்ளக்காதல் உறவை முடித்துக்கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார்.
ஆனால், திரௌபதி அதற்கு மறுத்துவிட்டார். "சுரேந்திரா இல்லாமல் என்னால் வாழ முடியாது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் வரதட்சணை வழக்குப் போடுவேன்" என்று மனோகரை மிரட்டியுள்ளார். அதேபோல், மனோகர் தனது நண்பரான சுரேந்திராவிடம், தங்கள் நீண்ட கால நட்பை குறிப்பிட்டு, தனது மனைவியை விட்டுவிடுமாறு கோரியுள்ளார். ஆனால், சுரேந்திரா அதற்கும் மறுத்துவிட்டார்.
மனைவியின் மிரட்டல் மற்றும் நண்பரின் துரோகத்தால் மனமுடைந்த மனோகர், தனது தாய், மகள், மகன் ஆகியோருடன் தற்கொலை செய்துகொண்டார். இந்தச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திரௌபதி மற்றும் அவரது கள்ளக்காதலர் சுரேந்திரா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.