வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு

சனி, 25 டிசம்பர் 2021 (16:00 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப்  பரவி வருகிறது.  இந்நிலையில்   நோய் தடுப்பு நடவடிகையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு முன்பே தங்களின் பயண விவரத்தை வெளியிட வேண்டும். அவர்களுக்கு விமான  நிலையங்களில் உத்தேச பரிசோதனை செய்யப்படும்.

அவர்கள்  3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கோரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும்.

தொற்று இருந்த   நபரின் அருகில் இருக்கையில் அமர்ந்தவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்