இந்தியாவில் போலி டாக்டர்கள் இவ்வளவு அதிகமா?? அதிர்ச்சியூட்டம் செய்தி

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (14:26 IST)
இந்தியாவில் போலி டாக்டர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்து, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறு முறைப்படி மருத்துவ கல்வியை முடிக்காமல் நாடு முழுவதும் ஏராளமானோர், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவருகிறார்கள் என மத்திய சுகாதாரத்துறையிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

அந்த தகவலின் படி 57 சதவீதம் பேருக்கு மேல், முறைப்படி மருத்துவம் படிக்காதவர்கள் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்தியாவின் கிராமப்பகுதியில் தான் இது போன்ற போலி டாக்டர்கள், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள் எனவும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், போலி டாக்டர்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி சட்டங்களை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்