சென்ற ஆட்டத்தில் கோஹ்லியும், ஷ்ரெயாஸும் அற்புதமாக ஆடி சதம், அரைசதம் என வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இந்த ஆட்டத்திலும் அவர்களுடைய பார்ட்னர்ஷிப்பை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துவக்க ஆட்டக்காரரும், சிறந்த பேட்ஸ்மேனுமான ஷிகார் தவான் காயம் ஏற்பட்டதிலிருந்து சுணக்கமான ஆட்டத்தையே கொடுத்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதிகப்பட்சமாக 23 ரன்களே எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள்.