வயிற்று வலியை தீர்க்க மலக்குடலில் டம்ளரை தினித்த போலி மருத்துவர்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (17:54 IST)
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மலக்குடலில் இருந்து ஸ்டீல் டம்ளரை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பின்பக்க முதுகு வலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் மலக்குடலில் சிறிய ஸ்டீல் டம்ளர் இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் டம்ளரை நீக்கினர். 
 
இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாவது:-
 
வயிற்று வழியை போக்குகிறேன் என கூறி போலி மருத்துவர் ஒருவர் அவரது மலக்குடலில் இந்த ஸ்டீல் டம்பளரை சொருகியுள்ளார். பாதிக்கப்பட்ட விவாசாயி எங்களிடம், மயக்க மருந்து கொடுத்து கண்ணாடியை சொருகியதாக தெரிவித்தார் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்