என்ன செய்வதென்று தெரியாமல் கழுதைகளை சிறையில் அடைத்த காவல்துறை

புதன், 29 நவம்பர் 2017 (14:19 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தாவரங்களை தின்று சேதப்படுத்திய கழுதைகளுக்கு வினோத முறையில் நான்கு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

                                                           நன்றி: ANI
உத்தரபிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில் உள்ள சிறை வளாகத்தில் அழகுக்காக தாவரங்கள், மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24ஆம் தேதி வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளன. மூத்த சிறை அதிகாரிகளின் உத்தரவின் போரில் கழுதைகளை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர் அவைகளை சிறையில் அடைத்தனர்.
 
கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த அதன் உரிமையாளர் உள்ளூர் பாஜக தலைவர் ஆதரவுடன் சிறை வளாக அதிகாரியை சந்தித்து பேசிய பின்னரே கழுதைகள் விடுவிக்கப்பட்டது. அதுவும் நான்கு நாட்கள் கழித்துதான் கழுதைகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து சிறையின் தலைமை காவலர் கூறியதாவது:-
 
ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தாவரங்களைக் கழுதைகள் தின்றும் கடித்தும் சேதப்படுத்தின. பலமுறை எச்சரித்தும் கழுதைகளின் உரிமையாளர் அவற்றை கட்டுப்படுத்தவில்லை. எனவே, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டது. பல சமயங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்ட இந்த கழுதைகள் காரணமாக இருந்துள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்