மேகி நூடுல்ஸ் மீண்டும் தடை; ரூ.45 லட்சம் அபராதம்: நெஸ்லே விளக்கம்!!

புதன், 29 நவம்பர் 2017 (13:41 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டு மேகியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்து இருப்பது கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் பல தரம் ஆய்வுகளுக்கு உட்பட்டு மீண்டும் மேகி விற்பனைக்கு வந்தது.
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடப்படும் உணவாக இது இருக்கிறது. இந்நிலையில் தற்போது, உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜாகான்பூர் மாவட்டத்தில் மேகி நூடுல்ஸ் தர ஆய்வில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தர ஆய்வில் தோல்வியுற்றதால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் மேகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அந்த் அறிக்கை பின்வருமாறு, வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேகி மாதிரிகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டன. ஆய்வின் முடிவில் மேகியில் சாம்பல் கண்டண்ட் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. 
 
இது மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் எனபதால், நெஸ்லே நிறுவனத்திற்கு 45 லட்சம் ரூபாயும், மூன்று விநியோகஸ்தர்களுக்கு 15 லட்சம் ரூபாயும் மற்றும் இரண்டு விற்பனையாளர்களுக்கு 11 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஆனால், இந்த புகாரை நெஸ்லே நிறுவனம் இதை மறுத்துள்ளது. மேலும், இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளது. மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்