முதல்வராகிறாரா ஃபட்நாவிஸ்??

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (12:55 IST)
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பாஜக-சிவாசேனா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வராக பொறுப்பேற்க போவது ஃபட்நாவிஸா? அல்லது ஆதித்யா தாக்கரேவா? என சிக்கல் நீடித்து வந்தது.

சிவசேனா, ஆதித்யா தாக்கரேவுக்கு இரண்டரை வருடங்கள் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என கோரி வந்தது. மேலும் இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சிக்கல் குறித்து அமித்ஷா, ஆதித்யா தாக்கரேவின் தந்தை உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்