குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணிக்காக பணியாற்றி வருபவர் நேபாளத்தின் திகயான் பகுதியைச் சேர்ந்த தேக் பகதூர் தபா. இவர் இன்று அதிகாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கோர்கா ரைஃபிள்ஸ் படையினருக்கான விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த சகவீரர் போலீஸாருக்கு புகாரளித்துள்ளார்.