சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அவகாசம் நீட்டிப்பு …

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:55 IST)
நாட்டில் கொரோனா பாதிப்பால் மக்களை காக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்  வரும் 31 ஆம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலிலுள்ள நிலையில்  இதுமேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.

எனவே சிறப்பு ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை  30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிரித்து  ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை வரும் 31 ஆம் தேதி காலை முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்