கர்நாடக மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 70% வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின் ஒருசில ஊடகங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் குழப்பமான முடிவுகள் வெளிவந்துள்ளது. ஒருசில செய்தி நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் ஒருசில ஊடகங்கள் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்காது என ஒருசில ஊடகங்களும் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.
நேற்று கர்நாடக தேர்தலுக்கு பின் எக்ஸிட்போல் நடத்திய ஜன்கீ பாத் என்ற நிறுவனம் இந்த தேர்தலில் பாஜக 95 - 114 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 73 - 82 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 32 - 43 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது.
அதேபோல் சிஎன்எக்ஸ் என்ற ஊடகம் பாஜக 102 - 110 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 72 - 78 இடங்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு 35 - 39 இடங்களும் கிடைக்கும் என கூறியுள்ளது.
மேலும் சீ - ஓட்டர் என்ற ஊடகம் பாஜக 97 - 109, காங்கிரஸ் 87 - 99, மதசார்பற்ற ஜனதாதளம் 21 - 30, மற்றவை 1 - 8. என கணித்துள்ளது
ஆக்சிஸ் என்ற செய்தி நிறுவனாம் பாஜக 79 - 92, காங்கிரஸ் 106 - 118, மதசார்பற்ற ஜனதா தளம் 22 - 30, மற்றவை 1 - 4. என கணித்துள்ளது.
வி.எம்.ஆர் என்ற அமைப்பு பாஜக 80 - 93, காங்கிரஸ் 90 - 103, மதசார்பற்ற ஜனதாதளம் 31 - 39, மற்றவை 2 - 4 என கணித்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என வரும் 15ஆம் தேதி வரை பொறுத்திருந்து தெரிந்து கொள்வோம்