திருடர்களிடம் இருந்து தப்பித்து...சாதுர்யமாகச் செயல்பட்ட சிறுமி - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (21:34 IST)
சிறுமியிடம் செல்போன் பறிக்க முயன்ற இருவரிடம் இருந்து சிறுமி சாதுர்யமாகத் தப்பிச் செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் பகுதியில் ஒரு சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் சிறுமியிடம் இருந்த செல்போனைப் பறித்துச் செல்ல முயன்றனர். அப்போது சுதாரித்த அப்பெண் ஒருவனைப் பிடித்தார். அங்கிருந்த மக்கள் உடனே கூடி வந்து  அவர்களைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

அந்தப் பெண்ணுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்