விஜய் நடித்த குஷி, பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும், ஏராளமான இந்தித் திரைப்படங்களிலும் நடித்த ஷில்பா ஷெட்டி, தற்போது இந்த மோசடி புகாரால் பெரும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளார்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துடன் தொடர்புடைய கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் சுமார் ரூ.60 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த மோசடியில் ஷில்பாவுக்கு அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.