விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி..!

Mahendran

வியாழன், 10 ஜூலை 2025 (11:03 IST)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சைபராபாத் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில், சட்டவிரோத பெட்டிங் செயலி மோசடி தொடர்பாக, பிரபல திரை உலக நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லட்சுமி, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீமுகி உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறைஅதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த பிரபலங்கள் தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும், சில ஆதாரங்கள் கிடைத்தவுடன், மேற்கண்ட நட்சத்திரங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறி இருப்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்